அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

Jan 17 2020 7:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.பாண்டுரங்கன் சந்தித்து, தனது இல்லத் திருமண விழாவுக்‍கான அழைப்பிதழை வழங்கினார். வேலூர் மாவட்டக்‍கழகச் செயலாளர் திரு.பார்த்திபன், திருப்பத்தூர் மாவட்டச்செயலாளர் திரு.பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, அ.ம.மு.க துணைத்தலைவர் திரு.நாமக்‍கல் அன்பழகன், மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

கழக அம்மா பேரவை துணைச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான திரு.தாம்பரம் நாராயணன், திரு.டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். செங்கல்பட்டு வடக்‍கு மாவட்டச் செயலாளர் திரு.கரிகாலன் உடனிருந்தார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, செங்கல்பட்டு வடக்‍கு மாவட்டக்‍கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்தனர். செங்கல்பட்டு வடக்‍கு மாவட்டச்செயலாளர் திரு.கரிகாலன் உடனிருந்தார்.

தென்சென்னை தெற்கு மாவட்ட கழக மகளிரணி செயலாளர் திருமதி வச்சலா, தனது பேரனின் பிறந்தநாளை முன்னிட்டு, கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் திரு.ஜி.​செந்தமிழன் உடனிருந்தார்.

வடசென்னை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் திரு.சிவராஜ், தனது திருமணநாளை முன்னிட்டு கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். வடசென்னை தெற்கு மாவட்டக்‍கழக பொதுக்‍குழு உறுப்பினர் திருமதி அமுதா, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

திருப்பத்தூர் மாவட்டக்‍கழகச் செயலாளர் திரு.ஆம்பூர் பாலசுப்பிரமணியன் மற்றும் மண்டல பொறுப்பாளர் திரு.பார்த்திபன் தலைமையில் கழகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றியக்‍‍கழக நிர்வாகிகள், திரு.டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட மகளிரணிச் செயலாளர் வரலட்சுமி, கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, கழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் திரு.குட்வில் குமார் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தென்சென்னை தெற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணிச் செயலாளர் திரு.ராஜாமணி உடனிருந்தார்.

திருவள்ளூர் தெற்கு மாவட்டக்‍கழகச் செயலாளர் திரு.லக்‍கி முருகன் தலைமையில் மாவட்ட, நகரக்‍கழக, ஒன்றியக்‍கழக நிர்வாகிகள், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00