முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, கிராமப்புறங்களில் நிலத்தடி நீரை உயர்த்துவதற்காக பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணி தீவிரம் - திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணைக்குட்டைகள் அமைப்பு

Jul 30 2014 11:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின் பேரில் கிராமபுறங்களில் நீர்மட்டம் உயர்த்துவதற்கான பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 5,160 பண்ணை குட்டைகள் தமிழக அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் ஏற்றத்திற்காக அனைத்துத்துறைகளில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கிராமபுறங்களில் நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக பண்ணை குட்டைகளை அமைக்க உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில், அரசு நிதியுதவியுடன் பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதிகளாக விளங்கும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளில் 5,160 பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மழைகாலங்களில் தண்ணீரை தேங்கி, விவசாயத்திற்கு பயன்படுத்தி கொள்ளவும், மீன்களை வளர்க்கவும் பண்ணைகுட்டைகள் பேருதவியாக உள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் 11,280 பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 96 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகவும், இதில் 59 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 5,160 பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மதிவாணன் தெரிவித்தார்.

இதனிடையே கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து வந்துசேறும் பயணிகள், குறைந்த கட்டணத்தில் தங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்ல ஏதுவாக அரசுப் பேருந்து கழகம் சார்பில் சிறப்பு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. பேருந்து சேவை தொடக்க நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00