திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து, உயிரிழந்த குழந்தை சுஜித்தின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் : உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு, ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவு

Apr 17 2014 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், கிடாம்பாளையம் கிராமத்தில், ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து, உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை சுஜித்தின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும், முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை சுஜித்தின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி. ஜெ. ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், கிடாம்பாளையம் கிராமம், காந்தி நகர் பகுதியில் தோண்டப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த, கிடாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு. துரை என்பவரின் ஒன்றரை வயது குழந்தை சுஜித், உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான் என்ற செய்தியை அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை சுஜித்தின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00