தமிழகத்தின் 7 மாவட்டங்களில் விவசாய நிலங்களுக்கிடையே இயற்கை எரிவாயுக் குழாய் பதிக்கும் கெய்ல் நிறுவனத்தின் திட்டம், முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் நடவடிக்கை காரணமாக, கைவிடப்பட்டது : முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி-பாராட்டு

Apr 23 2014 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் விவசாய நிலங்களுக்கிடையே இயற்கை எரிவாயுக் குழாய் பதிக்கும் கெய்ல் நிறுவனத்தின் திட்டம், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் நடவடிக்கை காரணமாக, கைவிடப்பட்டுள்ளது. இதற்காக, முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சி திரவ எரிவாயு முனையத்திலிருந்து பெங்களூருக்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்வதற்காக, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களின் விவசாய விளைநிலங்களின் வழியாக, சுமார் 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கும் திட்டத்தினை நிறைவேற்ற மத்திய அரசின் பொதுத்துறையைச் சேர்ந்த கெய்ல் நிறுவனம் முயற்சி மேற்கொண்டது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி தமிழக சட்டமன்றப் பேரவையில், இதுதொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றுக்கு பதிலளித்துப் பேசினார். இப்பிரச்சனை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக அப்போது முதலமைச்சர் தெரிவித்தார்.

விவசாய விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்தை கெய்ல் நிறுவனம் உடனடியாக கைவிடுவதுடன், நெடுஞ்சாலைகளின் ஓரமாக எரிவாயு குழாய்களை பதிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வலியுறுத்தினார். எரிவாயு குழாய்களை பதிப்பதற்காக விவசாய நிலங்களில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை சரிசெய்து, விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும், ஏற்கெனவே பதிக்கப்பட்ட குழாய்களை கெய்ல் நிறுவனம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தமது உரையின்போது தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து முதலமைச்சர் விளக்கமாக எடுத்துரைத்தார். இந்நிலையில், தமிழகத்தின் விளைநிலங்கள் வழியாக இயற்கை எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்தை கெய்ல் நிறுவனம் கைவிட்டுள்ளதாகவும், இத்திட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு விவசாயிகளும், பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00