மக்களின் முதல்வர் வழிகாட்டுதலின்படி தீபாவளியையொட்டி தமிழக அரசு இயக்கிய சிறப்புப் பேருந்துகளில் புதிய சாதனையாக 2 லட்சத்து 62 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் முன்பதிவு : அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 8 கோடியே 36 லட்சம் ரூபாய் வருவாய்

Oct 28 2014 6:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி, தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு, இயக்கிய சிறப்புப் பேருந்துகளில், புதிய சாதனையாக 2 லட்சத்து 62 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 8 கோடியே 36 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

தமிழக மக்கள், தீபாவளித் திருநாளை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு ஏதுவாக, மக்களின் முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா உத்தரவின்பேரில், கடந்த மூன்று ஆண்டுகளாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் சிறப்பான முறையில் இயக்கப்பட்டு, மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக, மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு, இந்த ஆண்டும், தீபாவளி பண்டிகையை மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாடும் வகையில், சென்னை உட்பட மாநிலம் முழுவதும் கடந்த 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 9,088 சிறப்புப் பேருந்துகளை இயக்கியது. தீபாவளிப் பண்டிகை முடிவடைந்து, மக்கள் ஊர் திரும்ப வசதியாக, கடந்த 22-ம் தேதி முதல் 26ம் தேதி வரை இதே அளவிலான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

சென்னை கோயம்பேட்டில் பயணிகளின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் பயணச்சீட்டு முன்பதிவு கவுண்ட்டர்கள் கூடுதலாக திறக்கப்பட்டு, அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளும், ஊழியர்களும் சிறப்பான சேவையை மேற்கொண்டனர். இதனால், எவ்வித சிரமமுமின்றி சொந்த ஊர்களில் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட முடிந்தது என பயணிகள் தெரிவித்துள்ளனர். தீபாவளிப் பண்டிகை முடிவடைந்து, வெளியூர்களில் இருந்து மக்கள், சென்னை மற்றும் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு திரும்ப ஏதுவாக, 9,088 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதால், பேருந்துகளில் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய முடிந்தது என்று பயணிகள் தெரிவித்தனர். இதற்காக தமிழக அரசுக்கு அவர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் பயணம் செய்வோர், இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டது. அலுவலகங்கள், வீடுகளில் இருந்தபடியே இணையதளம் மூலம் ஆன்லைனில் சிறப்புப் பேருந்துகளுக்கு முன்பதிவு செய்தோர் எண்ணிக்கை இம்முறை மேலும் அதிகரித்துள்ளது. தீபாவளி சீசனில் மட்டும் 2,61,994 பேர் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்தனர். இதன்மூலம், புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மூலம், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 8 கோடியே 35 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00