அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,623 பணியிடங்கள், 1,112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் : முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு

Aug 1 2014 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,623 பணியிடங்கள், மேலும், 1,112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பாக்கத்தில் 95 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா சட்டப்பேரவையில், பேரவை விதி 110-ன்கீழ் அறிக்கை ஒன்றை இன்று தாக்கல் செய்தார். உயர்கல்வித்துறையின் 13 பல்கலைக்கழகங்களில், நூலகம் சார்ந்த தகவல்கள், ஆராய்ச்சி மற்றும் பாடப் பொருட்களை இணையதளம் மூலம் இணைத்து அண்ணா பல்கலைக்கழகத்திலும், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்திலும் மின் தொடர்பு நூலக களஞ்சியங்களை இணைய தள வசதியுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் 1 கோடியே 86 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். நடப்பு கல்வியாண்டில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளில், 163 பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். மயிலாடுதுறை மற்றும் சீர்காழி சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைக்கிணங்க, மயிலாடுதுறையில் 'மணல்மேடு' என்னுமிடத்தில் புதியதாக இரு பாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடப்பாண்டு முதல் துவங்கப்படும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு அறிவிப்புகளையும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00