அரசு ஊழியர்களுக்காக தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 60,000 பணியாளர்களுக்கும் நீட்டிக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு

Aug 1 2014 3:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசு ஊழியர்களுக்காக தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 60,000 பணியாளர்களுக்கும் நீட்டிக்கப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார். இத்திட்டத்திற்கென ஆண்டுதோறும் செலுத்தப்படவேண்டிய காப்பீட்டுக் கட்டணமான 12 கோடியே 54 லட்சம் ரூபாயை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பணியாளர்கள் சரிசமமாக ஏற்றுக்கொள்வார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேரவை விதி 110-ன் கீழ், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். கூட்டுறவு சங்கங்களின் சேவைகள், மக்களுக்கு அவர்களின் கிராமங்களுக்கு அருகிலேயே கிடைத்திடும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் மற்றும் கோத்தகிரி, தருமபுரி மாவட்டத்தில் சிட்டிலிங்கி ஆகிய 3 புதிய மலைவாழ் பழங்குடியினர் பெரும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். நடப்பாண்டில், 6 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் 100 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் நவீனமயமாக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00