காஞ்சிபுரம் மாவட்டத்தில், இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து, உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் : ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவு

Jul 28 2014 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரம் மாவட்டம், சென்னகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஜீவா, வீட்டருகே சாலையைக் கடக்கும் போது இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்து உயிரிழந்தது குறித்து முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், சென்னகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த திரு. பெருமாள் என்பவரின் மகன் சிறுவன் ஜீவா, கடந்த 20-ம் தேதி, தனது வீட்டருகே சாலையை கடக்கும்போது, இரு சக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்தான் என்ற செய்தி அறிந்து, மிகுந்த மன வேதனை அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

விபத்திற்கு காரணமான இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள், பலத்த காயமடைந்த சிறுவன் ஜீவாவை மனிதாபிமான அடிப்படையில் மருத்துவமனையில் சேர்த்து அவனைக் காப்பாற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அவனை தூக்கிச்சென்று அருகிலிருந்த அவனது வீட்டிற்குள் விட்டுவிட்டுச் சென்று விட்டனர் என தெரியவந்துள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

பணிக்குச் சென்றிருந்த ஜீவாவின் பெற்றோர், பணி முடித்து வீடு திரும்பி வந்தவுடன், ரத்த காயங்களுடன் கிடந்த சிறுவன் ஜீவாவை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்று பரிசோதித்தபோது, சிறுவன் ஜீவா ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவன் ஜீவா மீது இருசக்கர வாகனத்தை மோதி அவனது இறப்புக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, தாம் உத்தரவிட்டுள்ளதன் பேரில், காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்து, வழக்குப் பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இந்த துயரச் சம்பவத்தில் அகால மரணமடைந்த சிறுவன் ஜீவாவின் குடும்பத்திற்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், சிறுவன் ஜீவாவின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00