கருணாநிதியின் பேரன் கலாநிதிமாறனுக்கு சொந்தமான 'KAL' கேபிள் நிறுவனத்திற்கு தடை - தேச நலன் கருதி நடவடிக்கை மேற்கொண்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

Aug 28 2014 2:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

கருணாநிதி பேரன் கலாநிதிமாறனின் 'KAL' கேபிள் நிறுவனத்துக்கு, தேசத்தின் நலன் கருதி, பாதுகாப்பு சான்றிதழ் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி மறுத்ததால், அதன் உரிமத்தை ரத்து செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

MSO-க்களுக்கு உரிமம் வழங்க, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பாதுகாப்பு சான்றிதழ் பெறவேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ள நிலையில், கருணாநிதியின் பேரன் கலாநிதிமாறனுக்குச் சொந்தமான 'KAL' கேபிள் நிறுவனம், பின்னர் சான்றிதழ் வாங்கித் தருவதாகக் கூறி, மத்திய செய்தி - ஒளிபரப்பு அமைச்சகத்திடம் இருந்து உரிமம் பெற்று MSO-க்களை நடத்தி வந்தது. ஆனால், இதுவரை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்புச் சான்றிதழை 'KAL' கேபிள் நிறுவனம் பெற்றுத்தரவில்லை. இதனையடுத்து, சென்னை மற்றும் கோவையில் செயல்படும் MSO-க்களுக்கான உரிமத்தை, மத்திய செய்தி -ஒளிபரப்பு அமைச்சகம், கடந்த 20-ம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து 'KAL' கேபிள் நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி திரு. V. ராமசுப்பிரமணியன் முன்னிலையில், இன்று விசாரனைக்கு வந்தது. அப்போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ரகசிய கடிதம் ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தேசத்தின் நலன் கருதி, 'KAL' கேபிள் நிறுவனத்திற்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி மறுத்ததால், அதன் உரிமத்தை ரத்து செய்ததாக செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனையடுத்து, நீதிபதி திரு. V. ராமசுப்பிரமணியம், வழக்கு விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார். முன்னதாக நேற்று நடைபெற்ற விசாரணையில், 'KAL' கேபிள் நிறுவனத்தினரிடம் நீதிபதி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். கேபிள் டி.வி. தொழிலில், நீங்கள் ஏகாதிபத்தியமாக இதுவரை செயல்பட்டு வந்தீர்கள் என்றும், இந்தத் தொழிலில் ஈடுபட்ட மற்றவர்களை மிகவும் பாதிப்படையச் செய்தீர்கள் என்றும், அரசு கேபிள் டி.வி.க்குக்கூட உரிமம் வழங்கவிடாமல் தடுத்தீர்கள் என்றும் 'KAL' கேபிள் நிறுவனத்திற்கு நீதிபதி ராமசுப்பிரமணியம் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00