நாடு முழுவதும் பரவுகிறது, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உன்னதத் திட்டமான அம்மா உணவகத்தின் புகழ் - ஏழை-எளிய மக்களின் பசி தீர்க்கும் மகத்தான சாதனைத் திட்டம் இது என அம்மா உணவகத்தை நேரில் பார்வையிட்ட சண்டிகர் மாநகர மேயர் புகழாரம்

Sep 2 2014 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான, "அம்மா உணவகங்களை" பார்வையிட்ட சண்டிகர் மாநகர மேயர் தலைமையிலான குழுவினர், இதேபோன்ற உணவகங்களை சண்டிகரில் விரைவில் தொடங்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 3-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று, எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் முன்னோடித் திட்டங்களில் ஒன்று, "அம்மா உணவகம்" ஆகும். ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், 3 ரூபாய்க்கு தயிர் சாதம் என ஏழை - எளிய மக்கள் தரமான உணவு வகைகளை வயிறார உண்ணும் வகையில், அம்மா உணவகங்கள் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அம்மா உணவகங்களுக்கு பல்வேறு மாநில அரசுகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், சண்டிகர் மாநகர மேயர் திரு. ஹர்பூல் சந்தர் கல்யாண் தலைமையிலான 25 பேர் கொண்ட குழுவினர், சென்னை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்டனர். அங்கு தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் உணவு வகைகளை அவர்கள் சாப்பிட்டு பார்த்து, பாராட்டு தெரிவித்தனர். உணவுகள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதாகவும், இதுபோன்ற குறைந்த விலை அம்மா உணவகங்களை சண்டிகரிலும் தொடங்குவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் சண்டிகர் மேயர் மற்றும் அவருடன் வந்துள்ள அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00