சிவகங்கை, சேலம், திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் உயிரிழந்த கழக நிர்வாகிகள் 5 பேரின் மறைவுக்கு மக்களின் முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

Nov 1 2014 7:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

சிவகங்கை, சேலம், திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் உயிரிழந்த கழக நிர்வாகிகள் 5 பேரின் மறைவுக்கு மக்களின் முதல்வரும், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மக்களின் முதல்வரும், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சிவகங்கை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திரு. N. கண்ணதாசன், புதுச்சேரி மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் திரு. K. கோதண்டபாணி, சேலம் மாநகர் மாவட்டம், கன்னங்குறிச்சி பேரூராட்சிக் கழகச் செயலாளர் டாக்டர் சாரதி என்கிற R.P. பார்த்தசாரதி, திருப்பூர் புறநகர் மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைத் தலைவர் திரு. V. மைதீன் பிச்சை, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் T. கைலாசம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு. R. செந்தில்குமார் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். திரு. கண்ணதாசன், திரு. கோதண்டபாணி, திரு. பார்த்தசாரதி, திரு. மைதீன் பிச்சை மற்றும் திரு. செந்தில்குமார் ஆகியோரை இழந்துவாடும் அவர்களது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00