காவேரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் மற்றும் நீர்முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட தமிழக அரசு வலியுறுத்தல் - உச்சநீதிமன்றத்தில் மீண்டும் இன்று மனுதாக்கல்

Apr 17 2014 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

காவேரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் மற்றும் நீர்முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மீண்டும் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காவேரி நதி நீரில் தமிழகத்துக்கு உரிய பங்கு கிடைக்க ஏதுவாக காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர்முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்கக்கோரி தமிழக அரசின் சார்பில் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இத்தகைய அமைப்புகள் ஏற்படுத்துவதை எதிர்த்து, கர்நாடக அரசு, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. கர்நாடக அரசின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசின் சார்பில், பொதுப்பணித்துறை செயலாளர் திரு.சாய்குமார் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தார். வழக்கறிஞர் திரு.உமாபதி தாக்கல் செய்த தமிழக அரசின் இந்த மனுவில், காவேரி நடுவர்மன்றம் தனது தீர்ப்பில் மேலாண்மை வாரியம் மற்றும் நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைப்பது அவசியம் என கூறியிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு காவேரி நீரில் உரிய பங்கை பகிர்ந்தளிக்க இத்தகைய அமைப்புகளை உருவாக்குவது அவசியம் என்றும் நடுவர்மன்றம் தெரிவித்துள்ளது- நடுவர் மன்ற தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னர், மேலாண்மை வாரியத்தையும், நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைத்திருக்கவேண்டும்- ஆனால், மத்திய அரசு இந்த அமைப்புகளை உருவாக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை- மேலும், உச்சநீதிமன்றத்தால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட காவேரி மேற்பார்வை குழுவிடமும், தமிழக அரசின் சார்பில் இதுகுறித்து பலமுறை வலியுறுத்தப்பட்டது. ஆனால், மேற்பார்வை குழு தமிழக அரசின் கோரிக்கையை புரிந்துகொள்ளாதது மட்டுமின்றி, மேலாண்மை வாரியம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழுவை உருவாக்க நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது.

ஆகவே காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, தமிழகத்துக்குரிய நீரைப் பெற இந்த இரு அமைப்புகளையும் ஏற்படுத்துவது ஒன்றே தீர்வாகும். இந்த அமைப்புகளை ஏற்படுத்தாததால், கர்நாடக அரசு கடந்த ஆண்டு ஜுன் மாதம் 24-ம் தேதி வரை தமிழகத்துக்கு, காவேரியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீரைக்கூட திறந்துவிடவில்லை. ஆகவே இந்த பிரச்னையில் தமிழகம் பாதிக்கப்படாமல் தடுக்க காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழுவை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிபதிகள் திரு.ஆர்.எம்.லோதா, திரு.குரியன் ஜோசப் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00