முதலமைச்சர் ஜெயலலிதா, அளிக்கும் ஆக்கமும், ஊக்கமுமே தமிழக வீரரின் உலகளாவிய சாதனைக்கு காரணம் என தமிழக விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டு

Jul 29 2014 3:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் விளையாட்டுத் துறையை உலகத் தரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் காரணமாகவே, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பளு தூக்குதல் பிரிவில், தமிழக வீரரான சதீஷ்குமார், தற்போது தங்கம் வென்று தமிழகத்திற்கும், தாய்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் என விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பல்வேறு விளையாட்டு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். சதீஷ்குமாரை பாராட்டி முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 50 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்திருப்பது தமிழகத்தில் மேலும் பல வீரர் - வீராங்கனைகளை உருவாக்குவதற்கு ஊக்கமாக இருக்கும் என அவரது பெற்றோரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை நாட்டிலேயே தலைசிறந்த மாநிலமாக மாற்றும் மிக உயர்ந்த லட்சியத்தோடு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அதற்கான ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். விளையாட்டுத் துறையிலும், தமிழகம் மேம்பாடு அடையவும், சர்வதேச தரத்திற்கு வீரர் - வீராங்கனைகளை உருவாக்கவும், மாநிலம் முழுவதிலும் உள்ள விளையாட்டு மைதானங்களை புனரமைத்திட அதிக நிதி ஒதுக்கி ஏற்கெனவே முதலமைச்சர் உத்தரவிட்டார். இதன் மூலம், கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சர்வதேசத் தரத்திற்கு இணையாக மைதானங்களும், விளையாட்டு அரங்கங்களும் அதிநவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சிக் கூடங்களில், விளையாட்டு வீரர் - வீராங்கனைகளுக்கு சிறந்த முறையில் பயிற்சிகள் அளிக்கப்படுவதால், முன்பை விட அதிக அளவில் தற்போது பலரும் அங்கு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்காட்லாந்தில் தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், தமிழக வீரர் சதீஷ்குமார், பளு தூக்கும் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருப்பதற்கு இதுவே முக்கிய காரணம் என விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பலரும் தெரிவித்துள்ளனர்.

சதீஷின் சாதனையை பாராட்டி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 50 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்திருப்பதன் மூலம் தங்கள் மகன் மேலும் பல சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை குவிப்பதற்கும், மேலும் பல வீரர் - வீராங்கனைகளை உருவாக்குவதற்கும் ஊக்கமாக அமையும் என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், தமிழகத்தின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த விளையாட்டுப் பிரபலங்கள் பலரும், விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

வேறு எந்தவொரு மாநில அரசும், விளையாட்டு வீரர்களுக்கு இதுபோன்ற பரிசுத்தொகையை வழங்குவதில்லை என்றும், பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஆட்சி, தமிழக விளையாட்டுத் துறைக்கு பொற்காலமாகும் என வீரர் - வீராங்கனைகள் பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

இதேபோல், தமிழகத்தின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த விளையாட்டு பிரபலங்கள் பலரும், விளையாட்டுத் துறையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கொண்டுள்ள அக்கறை, அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் திட்டங்களை வரவேற்று பாராட்டியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00