தைவான் பொதுத்தேர்தல் - 2-வது முறையாக அதிபராகும் சாய் இங் வென் வெற்றி

Jan 12 2020 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

தைவான் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், ஆளும் ஜனநாயக முன்னேற்ற கட்சியின் முக்கிய தலைவரான, சாய் இங் வென், 2-வது முறையாக அதிபர் பதவியை பிடித்துள்ளார்.

தைவான் நாட்டில், அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்றது. விறுவிறுப்பாக நடந்த தேர்தலில், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். காலை 8.00 மணிக்‍கு தொடங்கி மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தேர்தலில் 19 புள்ளி 3 மில்லியன் மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

பதிவான வாக்குகளை எண்ணும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது. இதில், அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக முன்னேற்ற கட்சியின் முக்கிய தலைவரும், தற்போதைய அதிபருமான சாய் இங் வென் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக அதிபர் பதவியை பிடித்துள்ளார்.

மொத்தம் பதிவான வாக்குகளில், 53 சதவீதம் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு எதிராக சீனா ஆதரவு கட்சியான கொமிந்தாங் கட்சியின் ஹான் கோயு 38 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்றார். இதையடுத்து, சாய் இங் வென் விரைவில் மீண்டும் அதிபராக பதவியேற்பார் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00