அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் எதியோப்பிய பிரதமர் : பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் வாழ்த்து

Dec 11 2019 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

எதியோப்பியா பிரதமர் Abiy Ahmed-க்‍கு அமைதிக்கான நோபல் பரிசு, நேற்று வழங்கப்பட்டது.

இலக்கியம், இயற்பியல், வேதியல், மருத்துவம், பொருளாதாரம், உலக அமைதி போன்ற துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு, உயரிய விருதான நோபல் பரிசு ஒவ்வெரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, கிழக்கு ஆப்பிரிக்க நாடான எதியோப்பிய பிரதமர் Abiy Ahmed அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான நார்வே தலைநகர் ஓஸ்லோவில், நேற்று நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில், அமைதிக்காக வழங்கப்படும் 100-ஆவது நோபல் பரிசை, Abiy Ahmed-க்‍கு, நோபல் பரிசுக் குழுவின் தலைவா் பெரிட் ரைஸ் ஆண்டா்சன் வழங்கி கவு​ரவித்தார்.

அமைதிக்‍கான நோபல் பரிசை பெற்ற Abiy Ahmed-க்‍கு, பல்லாயிரக்‍கணக்‍கான மக்‍கள், ஆரவாரத்துடன் வாழ்த்துகளை தெரிவித்தனர். அவர்களின் வாழ்த்துகளை, தலைவணங்கி Abiy Ahmed நெகிழ்ச்சியுடன் ஏற்றுக்‍கொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00