அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யலாம் : உக்ரைன் விவகாரத்தில் விசாரணைக்குழு பரிந்துரை

Dec 5 2019 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யலாம் என விசாரணை வாரியம் தெரிவித்துள்ளது.

வரும் 2020ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிராக ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜோ பிடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் குறித்து விசாரணை நடத்தும்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கீக்கு அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது. இதில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மூவரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் இடம் பெற்றுள்ளனர். தங்கள் விசாரணையில் அதிபர் டிரம்புக்கு எதிராக பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர். டிரம்பை பதவி நீக்கம் செய்யலாம் என்றும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதேவேளையில், டிரம்ப் செய்தது தவறு என்றும் எனினும் அதற்காக அவரை பதவி நீக்கம் செய்ய தேவையில்லை எனவும் விசாரணை குழுவில் இடம்பெற்றுள்ள குடியரசுக் கட்சியை உறுப்பினர் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00