கூகுள் மற்றும் முகநூல் நிறுவனங்களால் மனித உரிமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் - தனி மனித உரிமைகள் பாதிக்‍கப்படுவதாக மனித உரிமை அமைப்பு எச்சரிக்‍கை

Nov 21 2019 2:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

கூகுள் மற்றும் முகநூல் நிறுவனங்களால் மனித உரிமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக லண்டனைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு எச்சரித்துள்ளது.

லண்டனைச் சேர்ந்த "அம்னெஸ்டி" என்ற மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கூகுள் மற்றும் முகநூல் நிறுவனங்கள் தங்களின் சேவைகள் மூலம் பயனாளர்களின் தகவல்களை திருடி, அவர்களின் விருப்பதிற்கு ஏற்றார்போல் விளம்பரங்களை தந்து பணம் சம்பாதிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. இதன் மூலம் மக்களின் கருத்து சுதந்திரமும், வாங்கும் சுதந்திரமும் பறிக்கப்படுவதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் அவை வழங்கும் சேவைகளை தவிர்த்து, இந்த முறையிலேயே அதிகம் சம்பாதிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூகுளும், முகநூலும் "கண்காணிப்பு பூதங்கள்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை, மக்களின் தகவல்களை சேகரித்து, அவற்றை மக்களுக்கு எதிராகவே பயன்படுத்துவதாகவும், தனிப்பட்ட உரிமைகளை பறித்து தங்களின் ஆதிக்கத்தை மக்களின் மீது செலுத்துவதாகவும், "அம்னெஸ்டி" மனித உரிமை அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00