பொலிவியாவில் போராட்டம் தீவிரம் : ராஜினாமா செய்தார் அதிபர் ஈவோ மோரல்ஸ்

Nov 11 2019 6:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

பொலிவியா நாட்டில் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, அந்நாட்டு அதிபர் பதவியை, ஈவோ மோரல்ஸ் ராஜினாமா செய்தார்.

தென் அமெரிக்க நாடான, பொலிவியாவில், கடந்த அக்டோபர் மாதம் 20-ம் தேதி, அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது, அதிபர் ஈவோ மோரல்ஸ் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்தார். மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் முறைகேட்டில் ஈடுபட, அவர் வாக்கு எண்ணும் பணியை நிறுத்தி வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. மேலும், பதவி‌யை ராஜினாமா செய்யக்கோரி, அதிபர் ஈவோ மோரல்சுக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தின.

கடந்த 15 நாட்களாக அதிபர் ஈவோ மோரல்சுக்கு எதிராக போரா‌ட்டக்காரர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில், 5-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருவதை உணர்ந்த அதிபர் ஈவோ மோரலஸ், அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அரசியல் கட்சி தலைவர்கள், போலீசார், ராணுவத்தினர் வலியுறு‌த்தியதை அடுத்து, அவர் ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00