பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு - இந்தியாவைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

Oct 14 2019 8:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அபிஜித் பேனர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை புரிவோருக்‍கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்‍கான நோபல் பரிசுகள், ஸ்வீடன் தலைநகர் Stockhome-ல் கடந்த 7-ம் தேதி முதல் அறிவிக்‍கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்‍கியம், அமைதி ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவரான அபிஜித் பானர்ஜி, அமெரிக்காவைச் சேர்ந்த எஸ்தர் டூப்லோ மற்றும் மைக்கேல் கிரமர் ஆகியோருக்கு 2019ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உலக அளவில் வறுமையை ஒழிப்பதற்கான பொருளாதார கொள்கை பற்றிய ஆய்விற்காக மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அபிஜித் மற்றும் எஸ்தர் ஆகியோர் தம்பதியினராக வாழ்ந்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00