உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளக்க முடிவு - நேபாளமும் சீனாவும் இணைந்து மேற்கொள்ள திட்டம்

Oct 14 2019 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

நேபாளமும் சீனாவும் இணைந்து, எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளக்க முடிவு செய்துள்ளன.

சீன அதிபர் ஷி ஜின்பிங், மாமல்லபுர உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், நேபாளம் சென்றார். அங்கு நேபாள பிரதமர் கே.பி.ஷர்மாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர், கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் இணைந்து செயல்படும் என்றும், இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அறிவியல் ரீதியாக அளவீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவரெஸ்ட் சிகரத்தை கடந்த 1954-ம் ஆண்டு இந்தியா அளவீடு செய்தபோது அதன் உயரம் 8 ஆயிரத்து 848 மீட்டம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிப்பகுதி சரிந்ததாக கூறப்படுகிறது. இதனால், அதன் உயரத்தை மீண்டும் அளக்க 2017-ம் ஆண்டு நேபாள அரசு குழு ஒன்றை அமைத்தது. இந்நிலையில் இக்‍குழு தற்போது சீனாவுடன் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தை அளந்து அறிக்கை வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00