நேபாள அதிபர் Bidhya Devi Bhandari, - ஷி ஜின்பிங் இடையே முக்கிய பேச்சுவார்த்தை - வர்த்தக உறவுகள் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்து

Oct 13 2019 6:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

நேபாள தலைநகர் காத்மாண்டுவில், அந்நாட்டு அதிபர் Bidhya Devi Bhandari, சீன அதிபர் Xi Jinping ஆகியோருக்‍கும் இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், முக்‍கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சென்னையிலிருந்து நேற்று நேபாளம் புறப்பட்டுச் சென்ற சீன அதிபர் Xi Jinping-க்‍கு காத்மாண்டு விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்புக்‍ கம்பள வரவேற்பு அளிக்‍கப்பட்டது.

23 ஆண்டுகளுக்‍கு பிறகு, சீனாவிலிருந்து நேபாளத்திற்கு சென்றுள்ள சீனாவின் முதல் அதிபர் Xi Jinping, இருநாள் அரசு முறைப் பயணமாக நேற்று பிற்பகல் நேபாளம் சென்றடைந்தார். காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்தில் அவரை நேபாள அதிபர் Bidhya Devi Bhandari, வரவேற்றார். நேபாள பிரதமர் திரு. K.P. Sharma Oli, அந்நாட்டின் முக்‍கிய எதிர்க்‍கட்சியான நேபாள காங்கிரஸ் தலைவர் Sher Bahadur Deuba, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் திரு. Pushpa Kamal Dahal ஆகியோரையும் சீன அதிபர் சந்தித்து பேசினார். இருநாட்டு அதிபர்களுக்‍கு இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், காத்மாண்டு-திபெத் இடையே ரயில் போக்‍குவரத்து வசதி ஏற்படுத்துதல், சீன அரசுக்‍கு எதிராக செயல்படுவோரை சீனாவிடம் ஒப்படைத்தல், வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00