வாடிகனில் இன்று நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில், ‍கேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு புனிதர் பட்டம் - போப் பிரான்சிஸ் வழங்குகிறார்

Oct 13 2019 10:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

வாடிகன் நாட்டில் இன்று நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில், ‍கேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு, போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்குகிறார்.

கேரள மாநிலம், திருச்சூரில், கடந்த 1876-ம் ஆண்டு ‍மே மாதம் 3-ம் தேதி பிறந்தவர் மரியம் திரேசியா. சீறோ மலபார் திருச்சபையில் கன்னியாஸ்திரியாக இருந்த இவர், 1914-ம் ஆண்டு அருட் சகோதரிகளுக்கான திருக்குடும்ப சபையை நிறுவினார். இந்த சபை, தற்போது பல கிளைகளை கொண்டுள்ளது.

அயராத இறைப்பணி ஆற்றிய கன்னியாஸ்திரி மரியம் திரேசியா, கடந்த 1926-ம் ஆண்டு மரணமடைந்தார். அவருக்கு, கடந்த 2000-ம் ஆண்டு முக்திபேறு பெற்றவர் என்ற பட்டம், அப்போதைய போப் இரண்டாம் ஜான் பாலால் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன், புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடான, வாடிகனில் இன்று நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில், கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு, போப் பிரான்சிஸ், புனிதர் பட்டம் வழங்குகிறார். இந்த விழாவில், மத்திய அரசு சார்பில், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் திரு. முரளிதரன் தலைமையில் சிறப்புக்குழுவினர் பங்கேற்கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00