2019-ம் ஆண்டுக்‍கான வேதியியல் துறை நோபல் பரிசு அறிவிப்பு - அமெரிக்‍கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 3 பேருக்‍கு பகிர்ந்தளிப்பு

Oct 9 2019 6:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

2019-ம் ஆண்டுக்‍கான வேதியல் துறை நோபல் பரிசு, அமெரிக்‍கா, இங்கிலாந்து, ஜப்பானைச் சேர்ந்த 3 ஆராய்ச்சியாளர்களுக்‍கு அறிவிக்‍கப்பட்டுள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த Alfred Nobel நினைவாக, இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டுக்‍கான நோபல் பரிசுகள், ஸ்வீடன் தலைநகர் Stockhome-ல் கடந்த 7ம் தேதி முதல் அறிவிக்‍கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் மருத்துவத்திற்கும், நேற்று இயற்பியலுக்‍கும் நோபல் பரிசு அறிவிக்‍கப்பட்ட நிலையில், இன்று வேதியியல் துறைக்‍கு அறிவிக்‍கப்பட்டது.

வேதியியல் ஆராய்ச்சியில், லித்தியம் அயன் பேட்டரி தொடர்பான கண்டுபிடிப்புக்‍காக, நோபல் விருது அறிவிக்‍கப்பட்டுள்ளது. அமெரிக்‍காவைச் சேர்ந்த ஜான் குட் எனஃப், இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பானைச் சேர்ந்த அகிரா யோஷினோ ஆகிய 3 ஆராய்ச்சியாளர்களுக்‍கு விருது பகிர்ந்தளிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00