சிரியாவில் அரசுப் படைகளுக்‍கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்கப்படை - ராணுவ வீரர்களை திரும்ப பெறுவதாக அதிபர் டிரம்ப் தகவல்

Oct 9 2019 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிரியாவில் அரசுக்‍கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்க ராணுவ வீரர்களை திரும்ப பெறுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மத்தியக் கிழக்கு நாடான சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக 2011-ம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஒபாமா உத்தரவின்பேரில் அமெரிக்க படைகள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் ஐ.எஸ். பிடியில் இருந்த பல நகரங்கள் மீட்கப்பட்டு பெரும்பாலான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், சிரியாவில் அரசுக்‍கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்க ராணுவ வீரர்களை திரும்ப பெறுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சிரியாவில் போர் தொடங்கி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகியும் முடிவே இல்லாத போர்களில் அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பதை விரும்பவில்லை என அவர் கூறியுள்ளார். அதிபர் தேர்தலின் போது சிரியா, அப்கானிஸ்தான் நாடுகளில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப அழைப்பதாக வாக்குறுதி அளித்ததை டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00