பிரதமர் மோடி - சீன அதிபர் இடையே நடைபெறவுள்ள சந்திப்பு - காஷ்மீர் விவகாரம் இடம்பெறாது என சீனா அறிவிப்பு

Sep 18 2019 11:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதமர் திரு. மோடி - சீன அதிபர் ஜி ஜிங் பிங் இடையே நடைபெறவுள்ள இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பில், காஷ்மீர் விவகாரம் முக்கிய பங்கு வகிக்காது என சீனா தெரிவித்துள்ளது.

பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜிங்பிங் இடையிலான, இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு வரும் அக்டோபர் 10 முதல் 12ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. அதிபர் ஜிங் பிங் - பிரதமர் மோடி ஆகியோரின் விருப்பப்படியே இந்த ஆலோசனை நடைபெறும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் Hua Chunying தெரிவித்துள்ளார். இது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு என்பதால், காஷ்மீர் குறித்து, விவாதிக்கப்படும் என்பதை உறுதியாகக்‍ கூற முடியாது என அவர் கூறினார். இந்தச் சந்திப்பின்போது, என்ன பேச வேண்டும் என்பதை, இரு தலைவர்களும் முடிவு செய்து கொள்வார்கள் என்றும், காஷ்மீர் விவகாரம் முக்கிய பங்கு வகிக்காது என்றும் தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரம் என்பது, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இரு தரப்பு விவகாரம் என்றும், இந்த விவகாரத்தில் போர் ஏற்படுவதை சீனா விரும்பவில்லை என்றும் Hua Chunying கூறியுள்ளார். இந்தியாவும், பாகிஸ்தானும், சீனாவின் நெருங்கிய நட்பு நாடுகள் என்று கூறிய அவர், இரு நாடுகளும், பிரச்னையை அமைதியாக பேசி தீர்த்துக்‍ கொள்வதையே தாங்கள் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00