கொலம்பியாவில் வீட்டின் மீது விழுந்த விமானம் : விமானத்தில் பயணித்த 7 பேர் உயிரிழப்பு

Sep 17 2019 12:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொலம்பியா நாட்டில், சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில், 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொலம்பியா நாட்டின் பொபையன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, 9 பயணிகளுடன், சிறிய ரக விமானம் ஒன்று, அண்மையில், லொப்ஸ் நகருக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானத்தின் இன்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது.

இதனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில், வீட்டிலிருந்த சிறுவன் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து, விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00