வட கொரியா செல்வதற்கு இது சரியான தருணம் அல்ல - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தகவல்

Sep 17 2019 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

வட கொரியா செல்வதற்கு இது சரியான தருணம் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ‍தெரிவித்துள்ளார்.

வட கொரியாவுக்கு வரும்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், கடந்த மாத இறுதியில் கடிதம் எழுதியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அண்மையில், ஒப்பந்தத்தை மீறி, ஆணு ஆயுத சோதனையில், வட கொரியா ஈடுபட்டது. இதனால், வட கொரியா மீது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, வாஷிங்டனில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் டொனால்டு டிரம்ப், ஆகஸ்ட் மாத துவக்கத்தில், வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அனுப்பிய கடிதம் வந்தது என்றும், மாத இறுதியில் வந்த கடிதம் பற்றி ‌தனக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தார்.

மேலும், வட கொரியாவுக்கு செல்வதற்கு, இது சரியான தருணம் இல்லை என்று குறிப்பிட்ட அவர், ஆனால் அதேநேரம், இரு நாடுகளுக்கு இடை‌யே நல்ல நட்புறவு உள்ளது என்றும் கூறினார்.

இம்மாத இறுதியில் நடைபெறும் ஐ.நா., பொதுக்கூட்டத்தில், தென் கொரிய அதிபர் மூன் ஜேவை, அதிபர் டிரம்ப் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, வட கொரியாவின் அணு ஆயுத பயன்பாடு குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00