நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் - பெண் எம்.பி.-யின் குழந்தைக்‍கு புட்டிப் பாலூட்டிய சபாநாயகர்

Aug 22 2019 4:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

நியூசிலாந்து நாட்டு நாடாளுமன்றத்தில், பெண் எம்.பி. ஒருவரின் குழந்தைக்கு, சபாநாயகர் புட்டிப்பால் ஊட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

நியூசிலாந்து நாட்டின் தொழிலாளர் கட்சி எம்பியான Tamati Coffey மற்றும் அவரது கணவர் Tim Smith ஆகியோர் வாடகை தாய்மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர். கடந்த ஜூலை மாதம் பிறந்த அந்த குழந்தைக்கு Tutanekai Smith-Coffey என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது குழந்தையுடன் Tamati Coffey நேற்று நாடாளுமன்றத்திற்கு வந்தார். நாடாளுமன்ற அலுவல்கள் நடைபெற்று கொண்டு இருந்தபோது அவரது குழந்தையை வாங்கிய சபாநாயகர் Trevor Mallard, குழந்தைக்கு பாட்டில் மூலம் பால் ஊட்டினார். பின்னர் தனது இருக்கையில் அமர்ந்தபடி குழந்தையை தட்டிக்கொடுத்து கவனித்துக்கொண்டார். குழந்தைகள் மீது மிகுந்த பிரியம் கொண்ட சபாநாயகர் Mallard, கடந்த 2017ஆம் ஆண்டு பெண் எம்.பி. Willow-Jean Prime-ன் குழந்தையை இதே போன்று நாடாளுமன்றத்தில் கவனித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00