சீனாவில் நடைபெற்றுவரும் உலக ரோபோ மாநாடு : 20 தொழில் துறைகளை சார்ந்த 700 ரோபோக்கள் பங்கேற்பு

Aug 22 2019 3:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் நடைபெற்றுவரும் உலக ரோபோ மாநாட்டில் 20 தொழில் துறைகளை சார்ந்த 700க்கும் மேற்பட்ட ரோபோக்கள் இடம்பெற்றுள்ளன.

தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும், சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சங்கமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் உலக 'ரோபோ' மாநாடு நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உலக 'ரோபோ' மாநாடு தலைநகர் பீஜிங்கில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஒரு புதிய திறந்த சகாப்தத்திற்கான நுண்ணறிவு சூழல் அமைப்பு என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த மாநாடு வருகிற 25-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உளவு, மருத்துவம், பாதுகாப்பு உள்ளிட்ட 20 தொழிற்துறைகளை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன. அவற்றில், மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் டாக்டர் ரோபோ, ஆபத்து காலங்களில் உதவும் தன்மை கொண்ட நாய் ரோபோ, அரை கிலோ எடையுடன் 20 நிமிடங்கள் பறக்கக் கூடிய பறவை ரோபோ, நீரில் நீந்தும் மீன் ரோபோ உள்ளிட்டவை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00