ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வரிசையில் உருவாகும் 25-வது படத்திற்கு 'No Time to Die' என பெயரிடப்பட்டுள்ளது
Aug 21 2019 4:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரிட்டனின் ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்டின் ரகசிய குறிப்பெண் 007. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. ஜேம்ஸ் பாண்டின் முதல் திரைப்படம் 1962-ல் வெளியான டாக்டர் நோ. இந்நிலையில், ஜேம்ஸ் பாண்ட் வரிசையின் 25-வது படத்திற்கு 'No Time to Die என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் டேனியல் கிரேக் கதாநாயகனாகவும், ஆஸ்கார் விருது வென்ற ரமி மெல்கி வில்லனாகவும் நடிக்கின்றனர். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி இங்கிலாந்திலும், ஏப்ரல் 8-ம் தேதி அமெரிக்காவிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.