காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் : பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கருத்து

Aug 21 2019 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள நிலையில், காஷ்மீர் விவகாரம் இந்தியா - பாகிஸ்தான் தொடர்பானது என்றும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் எனவும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் டிரம்ப், இந்தியா- பாகிஸ்தான் இடையே தீவிரமான பிரச்சினைகள் உள்ளன என்றும் இருநாடுகள் இடையே கசப்பு தன்மை நிலவுவதற்கு மதமும் ஒரு காரணம் என்றும் குறிப்பிட்டார். இரு நாடுகளுடனும் அமெரிக்கா நல்லுறவை கொண்டிருப்பதாகவும் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் தொடர்புள்ள விவகாரம் என்றும் பேச்சுவார்த்தை மூலம் இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த தொலைபேசி உரையாடலில், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு கூடிய பெருங்கூட்டம் வன்முறையில் ஈடுபட்டதை பிரதமர் மோடி சுட்டிக் காட்டினார். இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்ட போரிஸ் ஜான்சன் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் பாதுகாப்பு அளிப்பதாகவும் உறுதியளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00