ஹாங்காங் விவகாரத்தில் தலையிடும் அமெரிக்‍காவுக்‍கு எச்சரிக்‍கை - ஏவுகணை சோதனை மூலம் மிரட்டல் விடுத்த சீனா

Aug 20 2019 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்‍கா மூக்‍கை நுழைப்பதாக எச்சரித்திருந்த சீனா, அந்நாட்டை மிரட்டும் வகையில் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

சீனாவுடன் ஒன்றிணைக்‍கப்பட்ட பகுதியாக ஹாங்காங் உள்ளபோதிலும், அதனை ஏற்க அந்நாட்டு மக்‍கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இந்த நிலையில், ஹாங்காங்கில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை சீனா கொண்டு சென்று தண்டிக்‍க வகை செய்யும் சட்ட மசோதாவுக்‍கு எதிராக ஹாங்காங் மக்‍கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்‍கும் வகையில் அமெரிக்‍க அதிபர் டிரம்ப் தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்த விவகாரத்தில் சீனா வன்முறையில் ஈடுபட்டால், அது மற்றொரு தியான்மென் படுகொலையாக மாறும் என்றும், சீனா அதை செய்ய முற்பட்டால் அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை பாதிப்படையும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஹாங்காங் விவகாரத்தில் தலையிடும் அமெரிக்‍காவை எச்சரிக்‍கும் வகையில், சீனா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. தங்கள் நாட்டு உள்விவகாரங்களில் மூக்‍கை நுழைக்‍கும் அமெரிக்‍காவுக்‍கு இதன்மூலம் சீனா மறைமுக எச்சரிக்‍கை விடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00