இலங்கை ராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமனம் : போர்க்குற்றவாளியை நியமித்ததற்கு ஐ.நா. அமெரிக்கா கண்டனம்

Aug 20 2019 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கையின் புதிய ராணுவ தளபதியாக போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வா நியமனம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.

இலங்கை ராணுவ தளபதியாக இருந்த லெப்டினல் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க பதவியில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து புதிய ராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2009ஆம் ஆண்டு உள்நாட்டு இறுதி யுத்தத்தின் போது 56வது டிவிசனுக்கு தலைமை தாங்கியவர் சவேந்திர சில்வா. போரின்போது, பொதுமக்கள், மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாகவும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணம் கிடைக்க பெறாமல் தடுத்ததாகவும் சவேந்திர சில்வா மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது ஐ.நா. மற்றும் சர்வதேச மனித உரிமைப்புகள் பலவும் போர்க்குற்றங்களை சுமத்தி இருந்தன. தற்போது, சவேந்திர சில்வா ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு ஐ.நா மற்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கை, ஐ.நா. அமைதி காப்பு முயற்சிகளில் இலங்கை தொடர்ந்து பங்களிப்பு செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00