வட கொரியா மேலும் இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளதாக வெளியான தகவலால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு

Aug 16 2019 9:27AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரிய பிராந்தியத்தில் அணு ஆயுதமற்ற நிலையை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இடையே கடந்த ஜூன் மாதம் நடந்த சந்திப்பில் உடன்பாடு எட்டப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடல் பகுதியை நோக்கி வட கொரியா ஏவியது. வட கொரியாவின் இச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று அதிகாலை இரண்டு ஏவுகணைகளை ஜப்பான் கடலில் செலுத்தி வட கொரியா சோதனை செய்துள்ளதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இரண்டு கொரிய நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என தென் கொரிய அதிபர் மூன். ஜே. இன் நேற்று ஆற்றிய தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் தென் கொரியாவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என வட கொரியா அதிரடியாக அறிவித்தது. இத்தகைய நிலையில் மீண்டும் அந்நாடு ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது கொரிய பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00