க்யூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் கொண்டாட்டம்

Aug 13 2019 8:59AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍காவின் காலனி ஆதிக்‍கத்தை வீழ்த்திய சோசலிசப் புரட்சியாளரும், க்யூபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

க்யூபாவின் பிரான் அருகில் ஒரு கரும்பு தோட்டத்தில், 1926-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் நாள் ஏஞ்சல் காஸ்ட்ரோ - லினா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ஃபிடல் காஸ்ட்ரோ... தந்தை ஏஞ்சல் காஸ்ட்ரோ பெரும் பண்ணையாராக இருந்தபோதும், அமெரிக்கர்களின் ஏகாதிபத்தியத்தில் க்யூபா சிக்குண்டு கிடப்பதைக் கண்டு ஃபிடல் மனம் வெதும்பினார்.

பாடிஸ்டா ராணுவத்திடம் சிக்‍கிக்‍கொண்ட ஃபிடல், சிறையில் அடைக்‍கப்பட்டு, 1955-ம் ஆண்டு விடுதலை ஆனார். புதிய யுத்த முறைகளை பயில்வதற்காக மெக்‍சிகோ பயணப்பட்ட ஃபிடல், அங்கு மற்றொரு போராளியான சேகுவாராவை சந்தித்தார். ஃபிடலும், "சே"வும் இணைந்து அடர்ந்த வனப்பகுதியில் விவசாயிகளையும், இளைஞர்களையும் ஒன்று திரட்டி போர்ப்பயிற்சிகளை வழங்கினர். கொரில்லா யுத்தப் படை வீரர்களாக மாற்றி, 1959-ம் ஆண்டு பாடிஸ்டா அரசை ஆயுதப் போராட்டத்தால் வீழ்த்தினர்.

சோசலிசக்‍ குடியரசாக மாறிய கியூபாவுக்‍கு, ஃபிடல் காஸ்ட்ரோ தலைமை வகித்தார். 1959-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை கியூபாவின் பிரதமராகவும், அதன்பின் 1976-ல் இருந்து அதிபராகவும் திகழ்ந்த ஃபிடல் காஸ்ட்ரோ, வயது மூப்பின் காரணமாக கடந்த 2008ம் ஆண்டு, அதிபர் பொறுப்பை, தனது ரால் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்து விட்டு பதவி விலகினார். தன்னை கொல்வதற்காக பின்னப்பட்ட சதிவலைகளில் இருந்து பலமுறை தப்பிய ஃபிடல், இறுதியாக நோய் காரணமாக காலமானார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00