பாகிஸ்தான் முழுவதும் 40 தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன - பிரதமர் இம்ரான்கான் பகிரங்க ஒப்புதல்

Jul 24 2019 12:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானில் 40 தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பகிரங்கமாக ஒப்புக்‍கொண்டுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள இம்ரான் கான், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றினார். அப்போது, தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து பாகிஸ்தான் பணியாற்றி வருவதாக தெரிவித்தார். இரட்டை கோபுர தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு கிடையாது என்றும், அல்கொய்தா தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானில் கிடையாது என்றும், ஆப்கனில்தான் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

பாகிஸ்தானில் 40 தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருவதாக பகிரங்கமாக ஒப்புக்‍கொண்ட இம்ரான் கான், இதனால் நாடு கடுமையான சூழலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானில், பின்லேடன் பதுங்கியிருந்த விஷயத்தை, தங்கள் நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.தான், அமெரிக்க ராணுவத்துக்கு தெரிவித்ததாகவும், அந்நாட்டின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.விடம் இது பற்றி கேட்டால், அவர்கள் உண்மையை கூறுவார்கள் என்றும் இம்ரான்கான் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00