ரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ரக ஏவுகணைகளை, இந்தியா உள்பட எந்த நாடுகளும் வாங்கக்கூடாது - அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

Jul 19 2019 4:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ரக ஏவுகணைகளை, இந்தியா உள்ளிட்ட எந்த நாடு வாங்கினாலும், கடும் விளைவுகளை சந்திக்‍க நேரிடும் என அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது.

ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகளை வாங்கும் நாடுகளுக்கு எதிராக, பொருளாதார தடை விதிக்கப் போவதாக, அமெரிக்கா எச்சரித்திருந்தது. ஆனால், ரஷ்யாவிடமிருந்து, 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், அதி நவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க, இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து கருத்து கூறிய அமெரிக்க ராணுவ கொள்கைகளுக்கான இணை செயலர் டேவிட் டிராச்டென்பெர்க், இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். ராணுவம் உள்ளிட்ட விஷயங்களில், இந்தியாவுடனான அமெரிக்‍க உறவு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்‍கு பலமாக உள்ளதாகவும், அதே நேரம், ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை மற்றும் ஆயுதங்களை, இந்தியா உள்ளிட்ட எந்த நாடு வாங்கினாலும், கடும் விளைவுகளை சந்திக்‍க நேரிடும் என்றும் எச்சரித்தார். ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் முடிவை, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00