பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் விரோதப் போக்‍குடன் செயல்படும் அமெரிக்‍கா - வடகொரியா பகிரங்க குற்றச்சாட்டு

Jul 5 2019 4:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் அமெரிக்‍கா தங்கள் நாட்டின் மீது தொடர்ந்து விரோதப் போக்‍குடன் செயல்படுவதாக வடகொரியா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

சர்வதேச அரசியல் அரங்கில், அமெரிக்‍காவும் வடகொரியும், தொடர்ந்து பல வருடங்களாக எதிர் எதிர் துருவங்களாக செயல்பட்டு வருகின்றன. அணுஆயுத விவகாரம் தொடர்பாக இவ்விரு நாடுகளுக்‍கும் இடையே கடுமையான மோதல் இருந்து வரும்போதிலும், அமெரிக்‍க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல், அந்நாட்டுக்‍கும் வடகொரியாவுக்‍கும் இடையே அவ்வப்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மிகப்பெரும் திருப்பமாக டிரம்ப், வடகொரியாவுக்‍கே சென்று அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனாலும், தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடை விவகாரத்தில், அமெரிக்‍கா தொடர்ந்து விரோதப் போக்‍கைக்‍ கடைபிடிப்பதாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது. பிற நாடுகளில் பணிபுரியும் தங்கள் நாட்டு தொழிலாளர்களை மீண்டும் தாய் நாட்டிற்கே திருப்பி அனுப்பக்‍கோரி அமெரிக்‍கா, ஃபிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை கூட்டாக இணைந்து ஐ.நா. உறுப்பு நாடுகளை நிர்பந்தித்து வருவதாகவும் வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது. இதன்மூலம் தங்கள் நாட்டின் மீதான அமெரிக்‍காவின் விரோதப் போக்‍கு அம்பலமாகியுள்ளது என்றும் வடகொரியா தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00