அமெரிக்க-இந்திய தொழில் கவுன்சில் வழங்கும் தலைசிறந்த தலைமை சர்வதேச விருது : கூகுள் வலைதள நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தேர்வு

Jun 6 2019 6:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க-இந்திய தொழில் கவுன்சில் வழங்கும் தலைசிறந்த தலைமைக்கான சர்வதேச விருதுக்கு, கூகுள் வலைதள நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்‍காவின் வாஷிங்டனில் தலைமையகத்தைக் கொண்டுள்ள யுஎஸ்ஐபிசி அமைப்பு, கடந்த 2007-ஆம் ஆண்டிலிருந்து தலைசிறந்த தலைமைக்கான விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. அந்த வகையில், 2019-ஆம் ஆண்டுக்கான அந்த விருதை வழங்குவதற்கு கூகுள் நிறுவன தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சையும், நாஸ்டாக் தலைமைச் செயலதிகாரி அடேனா ஃபிரட்மென்னும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வாஷிங்டனில் இந்த மாதம் 12-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்தியா ஐடியா மாநட்டில் அவர்களிருவருக்கும் அந்த விருது வழங்கப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 150 சதவீதம் அதிகரித்துள்ளதில் கூகுள், நாஸ்டாக் போன்றவை முக்கிய பங்கு வகித்துள்ளதால் அவர்களிருவருக்கும் இந்த விருதை யுஎஸ்ஐபிசி வழங்குகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00