ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறும் விவகாரம் - 4-வது முறையாக புதிய திட்டம் அறிவிப்பு

May 22 2019 11:08AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பாக, பிரதமர் தெரேசா மே, 4-வது முறையாக புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். ஆனால், இதனை ஏற்க முடியாது என எதிர்க்‍கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற இங்கிலாந்தில் நடைபெற்ற வாக்‍கெடுப்பில் பெரும்பான்மையான மக்‍கள் வெளியேற வேண்டும் என வாக்‍களித்தனர். இதனைத் தொடர்ந்து, பிரதமர் தெரேசாமே, இங்கிலாந்து வெளியேறுவதற்கான திட்டத்தை முன் வைத்தார். ஆனால், இந்தத் திட்டம் இங்கிலாந்திற்கு சாதகமாக இல்லை என நாடாளுமன்றத்தால் 3 முறை தோற்கடிக்‍கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வெளியேறுவதற்கான காலக்‍கெடுவை நீட்டித்து ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில், 4-வது முறையாக புதிய திட்டத்தை தெரெசாமே முன் வைத்துள்ளார். அதன்படி, எதிர்க்‍கட்சிகள் முன்வைத்த சில திட்டங்களை ஏற்றுக்‍ கொண்டதுடன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்‍க வேண்டும் என்றும் தெரெசா மே கோரிக்‍கை விடுத்துள்ளார். மீண்டும் வாக்‍கெடுப்பு நடத்துவதை தவிர்ப்பதற்காக இந்தத் திட்டத்தை அவர் முன்வைத்துள்ளார். ஆனால் தெரெசாமே முன்வைத்துள்ள திட்டத்தை ஏற்க முடியாது என எதிர்க்‍கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் ஜர்மிகார்பின் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00