நியூசிலாந்தில் துப்பாக்‍கிகள் மற்றும் ராணுவ பயன்பாட்டு வடிவத்திலான ஆயுதங்களுக்‍கு தடை -மசூதியில் நடத்தப்பட்ட துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தையடுத்து அரசு நடவடிக்‍கை

Mar 21 2019 4:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து, அந்நாட்டில், பொதுமக்‍கள், துப்பாக்‍கிகளை வைத்திருக்‍க தடை விதிக்‍கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 50 பேர் பலியாகினர்.

நியூசிலாந்து சட்டப்படி, 16 வயது நிரம்பிய ஒருவர் சாதாரண துப்பாக்கியையும், 18 வயது நிரம்பிய ஒருவர் தானியங்கி துப்பாக்கியையும் வாங்க முடியும். எனவே, நாட்டில் நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி சட்டத்தில் விரைவில் திருத்தம் கொண்டு வரப்படும் என அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்தார்.

அதன்படி, நியூசிலாந்தில், அனைத்து வகையான கை துப்பாக்கிகள், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆட்டோமெடிக், செமி ஆட்டோமெடிக் ரக துப்பாக்‍கிகள் வைத்திருக்‍கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை, வரும் ஏப்ரல் 11ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும், பாதுகாப்பு துறையை சேர்ந்தவர்கள், ஆயுதங்கள் வைத்துக் கொள்ள விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00