சந்திரனில் தாவரம் முளைத்தது - சீனா சாதனை

Jan 16 2019 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

சந்திரனில் சீனா நடத்தி வரும் ஆய்வில், அங்கு விதைக்‍கப்பட்ட பருத்தி விதைகள் முளைக்‍கத் தொடங்கியிருப்பதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலவின் மறுபக்கத்தை ஆராய சீனா அனுப்பிய விண்கலம் சேஞ்ச் -4 பத்திரமாக நிலவில் தரை இறங்கி ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த விண்கலம் நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்து வருகிறது. மேலும், இந்த விண்கலத்துடன் சீனா அனுப்பிய பருத்தி விதைகள் அங்கு முளைக்கத் தொடங்கியுள்ளன என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலவின் தட்டவெப்ப சூழலில் பருத்தி விதைகள் முளைக்க வைப்பதன் மூலம், அங்கு உயிர் வாழும் சூழலை மேலும் ஆய்வு செய்யும் சாதகமான நிலை ஏற்பட்டுள்ளதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உருளை கிழங்கு போன்ற வேறு சில பயிர்களின் விதைகளையும் நிலவில் முளைக்க வைக்க சீன விஞ்ஞானிகள் ஆய்வு நடத்திவருகின்றனர். இந்த ஆய்வை உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் உற்றுநோக்குகின்றனர். பூமியை போலவே நிலவிலும் பயிர்கள் விளையும் என்றால், அங்கே மனிதர்கள் குடியேறவும் நாள் குறித்துவிடலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00