பங்களாதேஷின் புதிய பிரதமராக மீண்டும் பொறுப்பேற்கிறார் ஷேக்‍ ஹசீனா - தேர்தல் முடிவுகளை ஏற்கப்போவதில்லை என எதிர்க்‍கட்சி அறிவித்திருப்பதால் சர்ச்சை

Dec 31 2018 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ஷேக்‍ ஹசீனா தலைமையிலான அவாமி லீக்‍ கட்சி அறுதிப்பெரும்பான்மை பலம் பெற்றிருப்பதால், அக்‍கட்சி மீண்டும் அங்கு ஆட்சி அமைக்‍கிறது. இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷில் ஷேக்‍ ஹசீனா தலைமையிலான அவாமி லீக்‍ கட்சி தற்போது ஆட்சி நடத்தி வருகிறது. ஆட்சிக்‍ காலம் விரைவில் முடிவடைய இருப்பதால் அங்கு நேற்று முன்தினம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்‍குகள் உடனடியாக எண்ணப்பட்டன. தேர்தல் நடைபெற்ற 299 தொகுதிகளில் 287 தொகுதிகளை ஷேக்‍ ஹசீனா கட்சி கைப்பற்றி அறுதிப்பெரும்பான்மை பலம் பெற்றது. முக்‍கிய எதிர்க்‍கட்சியான பங்களாதேஷ் தேசியக்‍ கட்சிக்‍கு 6 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதையடுத்து, பங்களாதேஷின் அடுத்த பிரதமராக ஷேக்‍ ஹசீனா மீண்டும் பொறுப்பேற்கிறார். அதேநேரம் இந்த தேர்தல் முடிவை புறக்‍கணிப்பதாகவும், மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் பங்களாதேஷ் தேசியக்‍ கட்சி அறிவித்திருப்பதால், அங்கு புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00