சீனாவுக்கு யாரும் கட்டளையிட முடியாது - மீறி கட்டளையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் : சீன அதிபர் ஜின்பிங் எச்சரிக்கை

Dec 19 2018 1:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவுக்கு யாரும் கட்டளையிட முடியாது எனவும், மீறி கட்டளையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீன அதிபர் ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், சீன சீர்திருத்த கொள்கையின் 40-வது ஆண்டு விழா பீஜிங் நகரில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அதிபர் ஜின்பிங் கலந்து கொண்டு உரையாடினார். அப்போது அவர் தனது நாட்டின் கடின உழைப்பு, விவேகம், துணிச்சல் ஆகியவற்றை புகழ்ந்தார். சீனாவின் முன்னாள் தலைவர் டெங் ஸியாவோபிங் 40 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்த சீர்திருத்தக்கொள்கைகளை அமல்படுத்திய பின்னர் நடத்தப்பட்டுள்ள சாதனைகளை பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய அவர், என்ன செய்ய வேண்டும் என்றோ அல்லது என்ன செய்யக்கூடாது என்றோ சீன மக்களுக்கு யாரும் கட்டளையிட முடியாது என கூறினார். இந்த கருத்து, அமெரிக்காவிற்கு மறைமுகமான எச்சரிக்கையாக கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00