இலங்கை நாடாளுமன்றத்தை முடக்‍கும் உத்தரவை திரும்பப் பெற்றார் அதிபர் சிறிசேன - சர்வதேச நாடுகளின் நிர்ப்பந்தத்தை தொடர்ந்து நடவடிக்‍கை

Nov 5 2018 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை நாடாளுமன்றத்தை முடக்‍கிய உத்தரவை அதிபர் சிறிசேன தளர்த்தினார். இந்த பரபரப்பான அரசியல் சூழலில் வரும் 5-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது.

இலங்கையில் கடந்த வாரம் ரணில் விக்‍ரமசிங்கவை பதவி நீக்‍கம் செய்து, ராஜபக்‍சவை புதிய பிரதமராக, அதிபர் சிறிசேன நியமித்தார். நாடாளுமன்றத்தையும் அதிபர் சிறிசேன தற்காலிகமாக முடக்‍கினார். சிறிசேனவின் இந்த செயலுக்‍கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியது. அமெரிக்‍கா உள்ளிட்ட நாடுகளின் நிர்பந்தத்தால், இலங்கை நாடாளுமன்றத்தை முடக்‍கிய உத்தரவை அதிபர் சிறிசேன தளர்த்தியுள்ளார். வரும் 5-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது.

இலங்கை நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் உள்ள​நிலையில், பிரதமர் பதவியை தக்‍கவைத்துக்‍கொள்ள, ரணில் விக்‍ரமசிங்க மற்றும் ராஜபக்‍ச, அன்றைய தினம் பெரும்பான்மையை நிரூபிக்‍க நடவடிக்‍கைகள் மேற்கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகிவுள்ளன.

குறிப்பாக, 16 எம்.பி.க்களைக்‍ கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறுபவர்களே, பெரும்பான்மையை நிரூபிக்‍க முடியும் என்ற சூழலில், கொழும்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களின் கூட்டம் நாளை நடைபெறுகிறது. ரணில் விக்‍ரமசிங்க, ராஜபக்ச, ஆகிய இருவரில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00