நடுவானில் மாயமான இந்தோனேஷிய விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்‍கப்பட்டிருப்பதாக தகவல் - மீட்புப் பணிகளில் வல்லுநர்கள் தீவிரம்

Oct 29 2018 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

நடுவானில் மாயமான இந்தோனேஷிய பயணிகள் விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்‍கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும்அதில் பயணம் செய்த 189 பேரின் நிலைமை என்னவென்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் இருந்து இன்று காலை Pangkal Pinang என்ற இடத்திற்கு புறப்பட்ட லயன் ஏர் விமானம், புறப்பட்ட 13 நிமிடங்களில் நடுவானில் மாயமானது. காலை 6.33 மணிக்கு விமானத்துடனான தகவல் துண்டிக்கப்பட்டது. மாயமான விமானம், இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்‍கின்றன.

210 பேர் பயணிக்கும் வசதி கொண்ட இந்த போயிங் ரக விமானத்தில் 189 பேர் பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்‍கின்றன. அவர்களின் நிலை என்ன ஆனது என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. இந்தச் சம்பவம் இந்தோனேஷிய மக்‍களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், விபத்துக்‍குள்ளான விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்‍கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்‍கின்றன. இதையடுத்து அங்கு மீட்புக்‍ குழுக்‍கள் விரைந்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00