ஜப்பான் பிரதமர் அபேயை சந்தித்தார் பிரதமர் மோடி - இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை

Oct 28 2018 6:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றடைந்த பிரதமர் திரு. நரேந்திர மோடி அந்நாட்டு பிரதமருடன் இணைந்து அங்குள்ள தொழிற்சாலைகளை பார்வையிட்டார்.

இந்தியா - ஜப்பான் இடையிலான வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று டோக்கியோ சென்றடைந்தார். அவருக்கு, அங்கு ஜப்பான் அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பான் வாழ் இந்தியர்களுடன் உரையாடிய மோடி, இன்று யமனாஷி நகரில் உள்ள மவுண்ட் ஃபியூஜி ஹோட்டலில் அந்நாட்டு பிரதமர் Shinzo Abe-யை சந்தித்தார். இதற்காக அங்கு வந்த மோடியை அவர் உற்சாகத்துடன் வரவேற்றார். அங்கு நடைபெறும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் இருவரும் பங்கேற்று பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்‍கின்றனர். இதையொட்டி, இவ்விரு நாடுகளின் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவினரும் இந்த ஹோட்டலில் முகாமிட்டுள்ளன.

இந்நிகழ்வையொட்டி யமனாஷி பகுதியிலுள்ள ரோபோ எந்திரங்கள் பணியாற்றும் மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்றை ஜப்பான் பிரதமருடன் இணைந்து மோடி பார்வையிட்டார். அங்கு நடைபெறும் பணிகள் குறித்து அப்போது அவர் ஆர்வமுடன் கேட்டறிந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00