அமெரிக்காவின் அணுசக்தி பிரிவு தலைவர் பதவி : இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அதிகாரி பரிந்துரை

Oct 5 2018 12:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் அணுசக்தி பிரிவு தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அதிகாரி ரீட்டா பரன்வால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் அதிநவீன அணு உலைகளின் மேம்பாட்டுக்கான புதிய சட்டம் ஒன்றில் அதிபர் டிரம்ப், கடந்த வாரம் கையெழுத்திட்டார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் எரிசக்தி துறையின் கீழ் உள்ள அணுசக்தி பிரிவுக்கு புதிய தலைவர் தேர்வு நடக்கிறது.

இந்த பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அதிகாரி ரீட்டா பரன்வாலை டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். அவரை செனட் உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு தேர்வு செய்ய உள்ளனர்.

இதில் அவரது நியமனம் உறுதியானால், அமெரிக்காவின் அணுசக்தி தொழில்நுட்ப ஆய்வு, மேம்பாடு மற்றும் நிர்வாகத்துக்கு ரீட்டாவே பொறுப்பாவார் என வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டு உள்ளது. அவர் தற்போது அமெரிக்க அணுசக்தி துறையில் விரைவான கண்டுபிடிப்புக்கான திட்டத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00