அமெரிக்‍காவின் உயரிய விருதுக்‍கு மகாத்மா காந்தி பெயர் பரிந்துரை - நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் தீர்மானம்

Oct 3 2018 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேசபிதா மகாத்மா காந்தியடிகளுக்‍கு, அமெரிக்காவின் உயரிய விருதான நாடாளுமன்ற தங்கப் பதக்கம் வழங்க வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றம் சார்பில், சிறப்பாக சமூக தொண்டாற்றிய அமெரிக்கர்களுக்கு ஆண்டுதோறும் தங்கப்பதக்கம் விருது வழங்கி கவுரப்படுத்தப்படுத்து வழக்‍கம். இவ்விருது அரிதாக வெளிநாட்டவர்களுக்கும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், மகாத்மா காந்தியடிகளின் பெயரை, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கரோலின் மலோனே, அஹிம்சைக்காக போராடிய காந்தியடிகளுக்கு அமெரிக்காவின் மிக உயரிய தங்கப்பதக்கம் விருதுக்கு பரிந்துரை செய்து தீர்மானம் தாக்கல் செய்தார். இத்தீர்மானத்தை ஆதரித்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான அமி பேரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். காந்தியின் அமைதி, அஹிம்சை ஆகிய கொள்கைகளை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு அமெரிக்காவின் உயரிய விருதை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

அமெரிக்‍காவின் இந்த உயரிய விருது, அமெரிக்கர் அல்லாத வெளிநாட்டவர்களான அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா, போப் இரண்டாம் ஜான் பால், தலாய் லாமா, ஆங் சான் சூகி, போன்றவர்களுக்‍கு ஏற்கெனவே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00