இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் - போர்க்கால அடிப்படையில், மீட்புப் பணிகள் தீவிரம்

Sep 29 2018 2:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தோனேஷியாவின் Sulawesi தீவை, சுனாமி தாக்கியதில், 400-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

Sulawesi தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி ஐந்து அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, சுனாமி தாக்கியது. சுமார் 7 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் உருவாகி, ஊருக்குள் புகுந்து வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களை அடித்துச் சென்றன. இந்த பேரலைகளில் சிக்கி, 400 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்‍கின்றன. நிலநடுக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட Palu மற்றும் Donggala ஆகிய நகரங்களில், மின் இணைப்பு மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது கடினமாக உள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. ஆயினும், பாதிக்கப்பட்ட பகுதிகளில், இந்தோனேஷியா அரசு, போர்க்கால அடிப்படையில், நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நிவாரணப் பொருட்களுடன் ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மருத்துவக் குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00